
posted 31st January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கல்முனை மாநகர சபைக்கு கிழக்கு ஆளுநர் விஜயம்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்தார்.
ஆளுநருடன் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம். மணிவன்னன் உள்ளிட்ட அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.
இதன்போது மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையிலான அதிகாரிகளுடன் மாநகர சபையின் கீழ் உள்ள முக்கிய நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது குறித்து கலந்துரையாடியதுடன் கல்முனை பொது நூலகம், பொதுச்சந்தை, பிஸ்கால் காணி என்பவற்றையும் பார்வையிட்டு அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
கல்முனை பொது நூலக கட்டடத் தொகுதியில் செயற்படும் மாநகர சபையின் நிர்வாக அலுவலகத்தை இங்கிருந்து, அகற்றி இந்த நூலகம் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஏ. கபூர் மற்றும் கல்முனையன்ஸ் போரம் உள்ளிட்ட சிவில் அமைப்பினர் விடுத்த கோரிக்கை தொடர்பில் சாதகமாக பரிசீலித்த ஆளுநர், அது குறித்த சாத்தியப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி, மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி. உதயகுமரன் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேறிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)