கல்முனை பிராந்தியத்தில் தொற்றுநோய் பரவும் ஆபத்து

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கல்முனை பிராந்தியத்தில் தொற்றுநோய் பரவும் ஆபத்து

அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கையடுத்து தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம் தோன்றியுள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

தொடச்சியாக பெய்த மழையினாலும், டீ.எஸ். சேனநாயக சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் கரையோரப் பிரதேசங்களில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர் வீடுகளிலும்,இடைத்தங்கல் முகாம்களிலும் தங்கியுள்ளனர்.

தற்போது மழை வீழ்ச்சி குறைந்துள்ள நிலையில் தேங்கியுள்ள வெள்ளநீர் சுகாதாரமற்றுக் காணப்படுவதால் இந்நீரில் நடமாடுவதனையும், சிறு பிள்ளைகள் நீராடுவதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வயிற்றோட்டம், தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், கொதித்தாறிய நீரை பருகுமாறும் அறிவுறுத்தியுள்ளதுடன், தொடர்ச்சியான காய்ச்சல் இருந்தால் வைத்தியர்களை நாடுமாறும் டாக்டர் சகீலா இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிராந்தியத்தில் தொற்றுநோய் பரவும் ஆபத்து

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)