
posted 24th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிரும்
ஒடுக்கப்படும் சாதாரண மக்களின் நலனை தமிழரசு பேணவேண்டும்
மேட்டுக்குடிகளின் நலன்களுக்கு அப்பால் ஒடுக்கப்படும் சாதாரண மக்களின் நலன்பேணும் தலைமையாக தமிழரசு கட்சியின் வரலாற்று பாத்திரமானது புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புவதாக இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக சி. சிறீதரன் பொறுப்பேற்றுள்ளார். இதனையிட்டு சி. சந்திரகாந்தன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நீண்ட நெடிய அரசியல் வரலாற்றை கொண்ட எம் சமூகத்தின் பழம் பெரும் கட்சி ஒன்றுக்கு தலைமை ஏற்றிருக்கும் தங்கள் பயணம் வெற்றுக்கோஷ சித்தாந்த அரசியலுக்கப்பால் தமிழ் மக்களின் நிலம், நிர்வாகம், உரிமை மற்றும் இருப்பு சார்ந்து வெற்றியடைய வேண்டும் என விரும்புகின்றேன். மேட்டுக்குடிகளின் நலன்களுக்கு அப்பால் ஒடுக்கப்படும் அடிமட்ட சாதாரண மக்களின் நலன்பேணும் தலைமையாக தங்கள் வரலாற்றுப் பாத்திரமானது புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)