
posted 3rd January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இராணுவம், பொலிஸ் யாழில் டெங்குவை ஒழிப்பதற்கு உதவிக்கரம்
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
யாழ். நகரம், நல்லூர், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளிவேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பகுதிகளில் டெங்கு நோய்ப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திங்களன்று (01) வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படத்த சுகாதார திணைக்களம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவம் ஆகியோரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)