அம்பாறையில் மக்கள் பிரச்சனைகளை பிரதேச மட்டத்தில் தீர்க்க நடவடிக்கை

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அம்பாறையில் மக்கள் பிரச்சனைகளை பிரதேச மட்டத்தில் தீர்க்க நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொலிஸ் உபதேச குழுக்களை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடல் கெப்சோ அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாறையில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என். ஜயபத்ம தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலின் போது, நிகழ்வின் பங்காள அமைப்பான கெப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளரும், உபதேசக் குழுவின் தவிசாளருமான ஏ.ஜே. காமில் இம்டாட், பொலிஸ் உயரதிகாரிகள், அம்பாறை மாவட்டத்தில் செயற்பட்டு வரும் பொலிஸ் உபதேசக் குழுக்களின் பிரதிநிதிகள், சமூகப் பொலிஸ் சேவைப் பிரிவின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இவ்வருடத்தின் முதலாவது விசேட மாவட்ட குழு கூட்டத்தின் போது அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளவுள்ள திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதுடன், பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து இம்மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 23 பொலிஸ் நிலையங்களின் கீழ் செயற்பட்டு வரும் உபதேசக் குழுக்கள் மற்றும் பொலிஸார் போன்றோர் இணைந்து பிரதேச ரீதியாக காணப்படும் பிரச்னைகள் மற்றும் தேவைகள் போன்றவற்றைக் கண்டறிந்து சிறந்த சமுதாயத்தினைக் கட்டியெழுப்பும் வகையிலான வேலைத் திட்டத்தினையும், நடைமுறைப் படுத்துதல் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

இதன்போது அம்பறை மாவட்டத்தில் உள்ள தீய பழக்கவழக்க செயற்பாட்டாளர்களை சீர்திருத்துதல், மக்கள் பிரச்னைகளை உடனடியாகத் தீர்த்து வைப்பதற்கான செயன்முறையினை மேற்கொள்ளல், மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான வழி வகைகளை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என். ஜயபத்ம சுட்டிக்காட்டியதுடன் இதற்கென அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அம்பாறையில் மக்கள் பிரச்சனைகளை பிரதேச மட்டத்தில் தீர்க்க நடவடிக்கை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)