
posted 24th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
அம்பாறை மாவட்ட மீனவர் மாநாடு

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளத்தின் ஏற்பாட்டில் இன்று 24ஆம் திகதி புதன் கிழமை அம்பறை மாவட்டத்தில், மாவட்ட மீனவர் மாநாடு ஒன்று நடைபெற்றது.
“மீன்பிடித்தொழில் அனர்த்தத்தில் தீர்விற்கான மீனவர் பலத்தைக்கட்டியெழுப்புவோம்”* எனும் தலைப்பில் மேற்படி அம்பாறை மாவட்ட மீனவர் மாநாடு இன்று (24) பிற்பகல் 4 மணிக்கு, சாய்ந்தமருது சதுக்கத்தில் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தலைவருமான நிஹால் கலப்பத்தி, நிழறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாநாடு நடைபெறவுள்ளது.
மேலும்,
- கட்டம், கட்டமாக துறைமுகங்கள் அமைக்கப்படுவதால் மீனவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உடனடியாகத்தலையிட வேண்டும்.
- எரிபொருள், மின்சாரம், ஐஸ் உள்ளிட்ட மீனவர்களதுஅத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும்.
- துறைமுகங்கள், நங்கூரமிடும் இடங்கள், படகுகள் தரிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து மீனவர் தொழில்சார் பிரச்சினைகளுக்கும் உடனடித்தீர்வு வேண்டும்.
- அனைத்து நடுத்தர, சிறுமீன்பிடி மீனவர்களுக்கும் உதவித்தொகை கொடுப்பனவுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்
- வடக்கு கடல் பரப்பில் எமது மீன்வளத்தை கொள்ளையடிக்கும் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
- சுற்றுச்சூழல், மீன்வளம் உள்ளிட்ட ஏனைய வளங்களை அழித்து நாசம் செய்த ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை கண்டிப்போம்.
- தொழிலாளி, விவசாயி, மீனவர் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதுடன், தீர்வுகளை நோக்கி பிரமாண்டமான மீனவர் சக்தியைக் கட்டியெழுப்புவோம்.
என்பன போன்ற சம்மேளனத்தின் முன்மொழிவுகள் மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டன. இந்த மாபெரும் மீனவர் மாநாடு சம்மேளன கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் ஏ. ஆதம்பாவா தலைமையில் இடம்பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)