
posted 15th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
80 குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கிவைப்பு
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 80 குடும்பங்களுக்கான பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு யாழ் நகரில் உள்ள பூமணி அம்மா அறக்கட்டளையகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
பூமணி அம்மா அறக்கட்டளையகத்தின் இலங்கை தலைவரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பொங்கல் பொதிகளை பூமணி அறக்கட்டளை இலங்கை தலைவர் விந்தன் கனரட்ணம், பூமணி அறக்கட்டளைகள் ஆலோசகர் இ.மயில்வாகனம், இலத்திரனியல் பொறியியலாளர் சா.தவசங்கரி, மற்றும் பூமணி அம்மா அறக்கட்டளைகள் நிர்வாகிகள் வழங்கிவைத்தனர்.
இதற்கான நிதியினை புலம் பெயர்ந்து பிரான்சில் வசிக்கும் பூமணி அம்மா அறக்கட்டளை தொடக்குனர் விசுவாசம் செல்வராசா அவர்களின் ரூபா 160000/- பெறுமதியில் வழங்கப்பட்டுள்ளன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)