42 ஆயிரத்துக்கும் அதிக குடும்பங்கள் பாதிப்பு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

42 ஆயிரத்துக்கும் அதிக குடும்பங்கள் பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல குளங்களும் வான் பாய்ந்து வருகின்றன இதனால் வெள்ளப்பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் 30 ஆயிரத்து 195 குடும்பங்களை சேர்ந்த 97 ஆயிரத்து 978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 வீடுகள் முழுமையாகவும் 143 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. சேனநாயக்க சமுத்திரத்தின் 110 அடியை கடந்துள்ளது.

இதனிடையே, அம்பாறை மாவட்டத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இவ்வாறு, இடம்பெயர்ந்த குடும்பங்கள் 228 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 ஆயிரத்து 525 குடும்பங்களை சேர்ந்த 39 ஆயிரத்து 38 பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும், தற்சமயம் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் கிழக்கில் அம்பாறை மாவட்டம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்ஓயா, சேனநாயக்க சமுத்திரத்தின் கொள்ளளவையும் விட மேலும் நீர் அதிகரித்துள்ளதால் இந்த சமுத்திரம் வழிந்தோடி வருவதுடன் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் குறிப்பாக நிந்தவூர் காரைதீவு, மாளிகைக்காடு சாய்ந்தமருது, இறக்காகமம் அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று போன்ற பிரதேசங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று (12) மழை தணிந்திருந்த போதிலும் வெள்ள நீர் மட்டங்கள் இந்த பிரதேசங்களில் அதிகரித்து மக்கள் பெரும் அவலங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை கல்முனை - அக்கறைப்பற்று, கல்முனை - அம்பாறை, அக்கறைப்பற்று - அம்பாறை பிரதான வீதிகளின் பல இடங்களில் வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதுடன் சில இடங்களில் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் போக்குவரத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

42 ஆயிரத்துக்கும் அதிக குடும்பங்கள் பாதிப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)