
posted 30th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
16 வது பட்டமளிப்பு விழா
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தினங்களில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
பெப்ரவரி 10ஆம் தேதி 3 அமர்வுகளும் 11ஆம் தேதி 3 அமர்வுகளுமாக மொத்தமாக ஆறு அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகள் தமக்கான பட்டங்களை பெற உள்ளனர். இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகள் பட்டம் பெற உள்ளதோடு மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.
இரண்டாம் நாள் நான்காவது அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தை சேர்ந்த 314 பட்டதாரிகள் பட்டம் பெற உள்ளதோடு ஐந்தாவது அமர்வில் கலை கலாசார பீடத்தை சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 350 பேருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது. ஆறாவது அமர்வில் கலை கலாசாரம் மற்றும் முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 361 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.
1441 உள்வாரி பட்டதாரிகளுக்கும் 711 வெளிவாரி பட்டதாரிகளுக்குமாக மொத்தம் 2152 பட்டதாரிகளுக்கு இந்த பட்டமளிப்பு விழாவின் போது பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும், இந்த பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையிலும் இடம்பெற்றவுள்ளதாக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)