
posted 12th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஹெலிகொப்டரில் யாழ்ப்பாணம் வந்திறங்கிய பிரிட்டன் இளவரசி
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் நேற்று (11)nவியாழன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணம் வருகை தந்த இளவரசி உள்ளிட்ட குழுவினரை வடமாகாண ஆளுநர் வரவேற்றிருந்தார்.
தொடர்ந்து யாழ்.பொது நூலகத்திற்கு சென்ற இளவரசி உள்ளிட்டவர்களை யாழ்.மாநகர சபை ஆணையாளர் , நூலகர் , நூலக உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மற்றும் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)