
posted 16th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வெகுஜனறீதியான வெற்றி
மட்டக்களப்பில் இன்று (16) நடைபெற்ற மாதவனை, மயிலத்தமடு கால் நடைப்பண்ணையாளர்களின் கவனயீர்ப்பு போராட்டம் வெகுஜனறீதியான வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது. இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) இரா. துரைரெத்தினம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
குறிப்பிட்ட அங்கத்தவர்களுடன் மட்டும் தொடங்கிய கால்நடைப் பண்ணையாளர்களின் கோரிக்கை சமூகத்திற்கு மத்தியில் வலுப்பெற்றுள்ளது.
பல மாதங்களுக்கு மேல் பல கோரிக்கைகளை முன் வைத்து கால்நடைப் பண்ணையாளர்கள் ஆரம்பித்த தங்களது கவனயீர்ப்பு என்பது சர்வதேசம், தேசியம், மாகாணம், மாவட்டம், இராஜதந்திர மட்டங்கள் வரையும் தங்களது பிரச்சினையை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை கால்நடைப் பண்ணையாளர்களால் இன்று (16.01.2024) மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்கா இருந்து கச்சேரி வரையும் நடைபெற்ற வெகுஜனரீயான கவனயீர்ப்பு வெற்றி பெற்றுள்ளது.
இது கால்நடைப் பண்ணையாளர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த விடயத்தில் அரசியற்கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள், வெகுஜன அமைப்புக்கள், நலன்விரும்பிகளும் தங்களது ஆதரவை வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
அரச அதிபரிடம் கால்நடை சங்கப் பிரதிநிதிகளால் வழங்கப்பட்ட கோரிக்கைகள் வெற்றி அளிக்கின்றதோ இல்லையோ பண்ணையாளர்களின் கவனயீர்ப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதை உணர்ந்து அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)