
posted 21st January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக்கழக தொடக்க விழா
மட்டக்களப்பு புணானை விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக்கழகத்தின் தொடக்க விழா நிகழ்வுகள் குறித்த பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் கிழக்குமாகாண சபை ஆளுனருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெற்றது.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு சர்வமத குருமார்களின் ஆசீர்வாதத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.
மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவு அனுமதிப் பத்திரம் சம்பிரதாய பூர்வமாக வழங்கப்பட்டது. அத்துடன் இந்த நிகழ்வில் குறித்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்தினசேகர பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் வேரஞ்சன் கருணாரத்தின, தகவல் தொழில்நுட்ப பீடாதிபதி கலாநிதி சம்பத்டிகல, தலைமை அதிகாரி கலாநிதி அஸ்மின், செலாஸ் கொம் நிறுவன முன்னாள் தவிசாளர் ஆசிக் முகமட் அலி, ஆகியோர்கள் கொளரவ அதிதிகளாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கப்படும் விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக்கழகத்தின் எதிர்கால கல்வி தொடர்பான விடயங்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு,சர்வதேச பல்கலைக்கழக தரத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆலோசனைகளை முன்வைத்து உரையாற்றினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)