
posted 18th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வாகன விபத்தில் ஒருவர் மரணம்
களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியும் குருக்கள்மடம் செல்லக்கதிர்காம முருகன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள வளைவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இவ் விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன் மேலும் இருவர் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞர் மண்டூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் காயமடைந்தவர்கள் மண்டூர் மற்றும் எருவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)