
posted 21st January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வடக்கு மாகாண ஆளுநர் - இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று (20) சனி இந்த சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கௌரவ ஆளுநரால் இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிபுரியும் என தெரிவித்த உயர்ஸ்தானிகர், விசேடமாக வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)