
posted 8th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி
மின்சாரம் தாக்கி இளைஞன் பலியான சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது
குறித்த சம்பவம் இன்றைய தினம் (08) திங்களன்று கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத் தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய ஜேகதீஸ்வரன் பவித்திரன் என்ற வவுனியா பூந்தொட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் கிளிநொச்சி நிதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் விசரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)