
posted 16th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மன்னார் எருக்கலம்பிட்டியில் 14,000 சங்குகளுடன் மூவர் கைது
மன்னார் கடற்படைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து எருக்கலம்பிட்டி பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது அனுமதியளிக்கப்பட்ட அளவைவிட சிறிய அளவிலான சங்குகளை உடைமையில் வைத்திருந்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (15) திங்கட்கிழமை மதியம் கடற்படைக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மன்னார் மாவட்டத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் அத்தியட்சகர் ஹரத்தின் நெறிப்படுத்தலில் மன்னார் குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி மனல தலைமையினான குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது எருக்கலம்பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அனுமதி வழங்கப்பட்ட அளவை விட அதிக அளவிலான சங்குகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
அவற்றை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தின் பெயரில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த களஞ்சியசாலையில் 20,000 சங்குகளே களஞ்சியப்படுத்த அனுமதி காணப்பட்ட நிலையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்குகளும் வளர்ச்சி நிலை அடையாத சங்குகளும் களஞ்சியப்படுத்தியதன் அடிப்படையில் வீட்டின் உரிமையாளர் உட்பட பணியாளர்கள் இருவர் உள்ளடங்கலாக மூவர் கைது செய்யப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)