
posted 9th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பஞ்சரக ஆஞ்சநேயரின் இரதோற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவில் மருதனார்மடம் சுன்னாக ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஹனுமத் ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழாவின் பஞ்சரக ஆஞ்சநேயரின் இரதோற்சவம் இன்று (09) செவ்வாய் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய ருக்கும்,ஏனைய பாரிவார தெய்வங்களுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.
கடந்த 29.12.2023 அன்று ஸ்ரீமத் ஆஞ்சநேய ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழா ஆரம்பமாகி 09 நாளில் இரதோற்சவமும், நாளை (10) ஆஞ்சநேய ஜனனதின ஜெயந்தியும் இடம்பெற்று ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழா இனிதே நிறைவடையும்.
இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)