
posted 9th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நேரடியாக வாழ்த்திய அலிஸாஹிர் மௌலானா
பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டி ஐந்தாவது முறையாக பிரதமராக தெரிவாகியுள்ள ஷேக் ஹஸீனாவை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான அலிஸாஹிர் மௌலானா நேரடியாக சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலின்போது சர்வதேச கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த அலிஸாஹிர் மௌலானா, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டாக்காவில் அமைந்துள்ள பிரதமர் ஷேக் ஹஸீனாவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரை சந்தித்திருந்தார்.
இதன்போது பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் தனது உறுதியான நிலைப்பாட்டை பிரதமர் ஹசீனா வெளிப்படுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே இராஜதந்திர உறவுகளை வளர்ப்பதிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் அவரது தொலைநோக்கு அணுகுமுறை உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று அலிஸாஹிர் மௌலானா எம்.பி. தெரிவித்தார்.
பங்களாதேஷின் செழுமைக்கு மட்டுமல்ல, அண்டை நாடுகளுடன் அர்த்தமுள்ள ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் பிரதமர் ஹசீனாவின் அர்ப்பணிப்பானது மிகவும் ஊக்கமளிக்கிறது எனவும் அத்தகைய திறமை மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட தலைமைத்துவத்தைக் காணும் வாய்ப்பிற்காக தான் பெருமிதம் கொண்டவனாகவும் பிரதமர் ஹசீனாவின் வழிகாட்டுதலின் கீழ் தொடரும் முயற்சிகளின் சாதகமான பெறுபேறுகளைக் காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் அலிஸாஹிர் மௌலானா எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)