நிந்தவூர் ப.நோ. கூ. ச. விசேட பொதுச்சபை கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நிந்தவூர் ப.நோ. கூ. ச. விசேட பொதுச்சபை கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

நிந்தவூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் சனிக்கிழமையன்று (6) சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஏ.எம். ஜப்பார் தலைமையில் நிந்தவூர் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்றது.

9 இயக்குனர் சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான விசேட பொதுச்சபை கூட்டத்தில் முதலில் மகளிர் பிரதிநிதிகளுக்கான தெரிவு இடம்பெற்றது. இதன் போது சி.ஏ. நசீலா, எம்.ஐ. ஜனூபா ஆகிய இரு மகளிர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஏனைய ஏழு பேர் தெரிவின் போது 18 - 35 வயதிற்குட்பட்ட இருவர் உட்பட்ட 07 பேர் தெரிவிற்கு 12 பேர் முன்மொழியப்பட்டனர். இதற்கமைவாக 07 பேர் தெரிவிற்கும் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஏ.எச்.எம். ஸாமில், எம்.பி. இன்பாஸ் அஹமட், ஏ. சஹீட் அஹமட், எம்.ஏ.ஏ. சத்தார், எம்.வை. முஹம்மட் முஸ்தபா, ஏ.எச்.ஏ. வஹாப், ஏ.எல். நஜிமுதீன் ஆகியோர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

பின்னர் நடைபெற்ற இயக்குனர் சபை கூட்டத்தில் முன்னாள் தலைவர் ஏ. சஹீட் அஹமட் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக எம்.வை. முஹம்மட் முஸ்தபா தெரிவானார்.

இன்றைய கூட்டத்துக்கு 84 பொதுச்சபை உறுப்பினர்களில் 77 பேர் சமுகமளித்தனர்.

இந் நிகழ்வில், கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக தலைமைக் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஐ.எம். பரீட், எம்.சி. ஜலால்டீன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான யு.எல்.எம். பௌஸ், ஆர். ராஜசேகர் எம்.எப்.எம்.எப். முதஸ்ஸீர், எஸ். ஜாபீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிந்தவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கம் எரிபொருள் நிலையத்தை கொண்டிருப்பதோடு தற்போது இலாபமீட்டும் சங்கமாக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் ப.நோ. கூ. ச. விசேட பொதுச்சபை கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)