
posted 1st January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நிந்தவூரில் அரச சேவை உறுதியுரை
புதிய ஆண்டின் அரச அலுவலகங்களில் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதல்நாள் நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் தலைமையில் நடைபெற்ற பிரதான வைபவத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பங்குபற்றி அரச சேவை உறுதியுரை செய்தனர்.
ஆரம்பத்தில் பிரதேச செயலாளர் அப்துல் லதீப் தேசிய கொடியை ஏற்றிவைத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேநேரம் பிரதேச செயலக பதவியணியின் அனைத்து உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் தமிழில் அரச சேவை உறுதியுரை சத்தியப்பிரமாணத்தை உரத்து வாசித்தனர்.
தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் பற்றியும் அந்தக் குறிக்கோள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லதீப் நிகழ்வில் உரையாற்றினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)