நான் ஒஸ்டின் புத்தகம் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நான் ஒஸ்டின் புத்தகம் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி செயலாளரான ஒஸ்டின் பெர்னாண்டோவினால் எழுதப்பட்ட "நான் ஒஸ்டின்" என்ற புத்தகம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்த சுயசரிதை புத்தகத்தில் அரச சேவை மற்றும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் தீர்க்கமாக விவரிக்க்பட்டுள்ளது.

சமகால இலங்கை வரலாற்றில் சிக்கலான காலப்பகுதியில் பணியாற்றிய ஒஸ்டின் பெர்னாண்டோ, போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த 2001 - 2003 காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் 2017 - 2018களில் ஜனாதிபதியின் செயலாளராகவும் பதவி வகித்தார்.

அரச சேவையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ள அவர் தனியார் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பணிகளில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக அரசியல் வரலாற்றில் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளின் வாழ்நாள் சாட்சியாளராகவும் உள்ளார்.

ஊடகங்களிலோ அல்லது வேறு இடங்களிலோ ஆவணப்படுத்தப்படாத இலங்கை அரசியல் மற்றும் நிர்வாகத் துறை பற்றிய உண்மைத் தகவல்களை இந்த புத்தகம் கூறுகிறது. அதன் மூலம், அரசாங்கம் மற்றும் இராஜதந்திரிகள் குறித்தும் சமூகத்தில் மறைந்துள்ள மனித இயல்புகளின் சிறப்பு, பலவீனம் மற்றும் சில்ககல்களையும் வாசகர் அறிந்து கொள்ளலாம்.

"நான் ஒஸ்டின்" சுயசரிதையாக மாத்திரமின்றி காலோசிதமான சமூக கலந்துரையாடலாகவும் அமைந்துள்ளது.

நான் ஒஸ்டின் புத்தகம் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)