
posted 16th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மேலும் ஒத்திவைப்பு
சீரற்ற காலநிலை, மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் கடந்த சில நாட்களாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரே அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழுவினரின் ஆலோசனைக்கு அமைவாக உபவேந்தர், ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 2024 ஜனவரி 16ஆம் திகதி வரை இடைநிறுத்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதனை மேலும் நீடிக்கவும் எதிர்வரும் 22.01.2024 வரை அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சேத விபரங்கள் மதிப்பிடுவதற்கும் பல்கலைக்கழகத்தை விரைவாக சுத்தப்படுத்தி மீளவும் ஆரம்பிப்பதற்கும் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழிகாட்டலும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)