
posted 22nd January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தலைவர் சிறீதரனுடன் சேர்ந்து பயணிப்பேன்
தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிறீதரனுக்கு முழுமையான ஆதரவை வழங்கி - அவருடன் சேர்ந்து பயணிப்பேன் என்று அவருடன் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த ம. ஆ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் 17ஆவது பொதுக்கூட்டமும் தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவும் திருகோணமலையில் நடைபெற்றது. இதில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுமந்திரனை விட 47 வாக்குகளால் சிறீதரன் வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றி அறிவிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சுமந்திரன் எம். பி.,
“முதலாவதாக வெற்றிபெற்ற எனது நண்பர் சிவஞானம் சிறீதரனுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன். எமது கட்சியின் உள்ளக ஜனநாயகத்தை எடுத்துக்காட்டாக நிலை நிருத்தியிருக்கின்றோம். கடந்த காலங்களில் மாவை சேனாதிராசா தலைமையில் சிறப்பாக கட்சி நடைபெற்றது. இதேபோன்று புதிதாக தெரிவுசெய்யப்பட்ட தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கும் என்னுடைய முழு ஆதரவையும் வழங்கி - அவருடன் சேர்ந்து பயணிப்பேன்” என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)