
posted 8th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சிலம்பம் மற்றும் பீச் கபடி
கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டைமானின் ஏற்பாட்டின் பொங்கல் விழா நிகழ்வாக பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், திருகோணமலை கடற்கரையில் ஆண்,பெண் இருபாலரும் பங்கேற்ற சிலம்பம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் பங்கேற்றத்துடன், பல்வேறுப்பட்ட முக்கியஸ்தர்களும் கலந்துக்கொண்டனர்.
சிலம்பம் மற்றும் பீச் கபடி தொடர்ச்சியாக ஆரம்பமாகிய நிலையில் இன்றும் இடம்பெற்று வருகிறது. அதற்கான இறுதிப்போட்டியானது நாளை 8ஆம் திகதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)