
posted 26th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கொடூர விபத்தில் இராஜாங்க அமைச்சர் நிஷாந்தவும் அவரின் மெய்ப்பாதுகாவலரும் பலி
கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (25) வியாழன் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சரத் நிஷாந்தவும் அவரின் மெய்ப்பாதுகாவலரும் உயிரிழந்தனர்.
நேற்று (25) வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கந்தானைக்கு அண்மையாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இராஜாங்க அமைச்சரின் ஜீப் கொள்கலன் வாகனத்துடன் மோதி பின்னர், வீதியின் பாதுகாப்பு வேலியுடன் மோதுண்டு நொறுங்கியது.
இதில் ஜீப்பில் பயணித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரின் மெய்ப்பாதுகாவலரான கான்ஸ்டபிள் ஜெயக்கொடி, வாகன சாரதி ஆகியோர் படுகாயமடைந்து ராகம போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் பொலிஸ் கான்ஸ்டபிளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
சாரதி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)