கல்முனையில் இனநல்லிணக்க பொங்கல்விழா

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கல்முனையில் இனநல்லிணக்க பொங்கல்விழா

கல்முனை மாநகரில் இனநல்லிணக்கபொங்கல் விழா வியாழக்கிழமை (25) வெகு விமரிசையாக நடைபெற்றது.

கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர்சேனை அமைப்பினர் வருடாந்தம் நடத்திவரும் இன நல்லிணக்க பொங்கல் விழாக்கள் வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவே நடைபெற்றது.

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் தலைவர் ஏ.ஏ. டிலாஞ்சன் தலைமையில் கல்முனை பழைய பஸ் நிலைய வளாகத்தில் விழா நடைபெற்றது.
இந்தப் பொங்கல் விழாவையொட்டி கல்முனை மாநகரம் முழுவதும் வாழைமரங்கள் மற்றும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

விழாவில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எல். புத்திக, சொரணம் குழுமத்தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான எம். விஸ்வநாதன், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். என். ராமேஸ் கல்முனை திரு. இருதயநாதர் ஆலய பங்குத் தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளார் சிவசிறிசச்சிதானந்த குருக்கள், கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை அதிபர் செ. கலையரசன், மாவட்டகலாச்சார உத்தியோகத்தர் கே. ஜெயராஜி மற்றும் இராணுவ, அதிரடிப்படை அதிகாரிகளும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் தேசியக் கொடியையும், இளைஞர் சேனைக்கான கொடியை தலைவர் டிலாஞ்சனும், கலாச்சாரக் கொடியை கலாச்சார உத்தியோகத்தர் ஜெயராஜியும் ஏற்றி வைத்ததுடன், தேசிய கீதம் மற்றும் இளைஞர்சேனை கீதமும் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ் இளைஞர் சேனையின் செயலாளர் எஸ். திலோஜனின் வரவேற்புரையைத் தொடர்ந்து அதிதிகள் பொங்கல் பானையில் அரிசி இடும் நிகழ்வும் நடைபெற்றது.

விழாவில் மகளிர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் ஆலய அறங்காவலர்கள், பொது மக்கள் பெருளவில் கலந்து கொண்டனர்.

வருடாந்தம் கல்முனை மாநகரில் இத்தகைய நல்லிணக்க பொங்கல் விழாவை நடத்திவரும் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர்சேனையின் செயற்பாட்டையும், அதன் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களையும் விழாவில் உரையாற்றிய அதிதிகள் வெகுவாகப்பாராட்டினர்.

கல்முனையில் இனநல்லிணக்க பொங்கல்விழா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)