கரையோர மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கரையோர மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

அம்பாறை மாவட்ட இங்கினியாகலையில் உள்ள சேனநாயக்கா சமுத்திரத்தின் (இங்கினியாகல நீர்த்தேக்கம்) நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. மொனறாகலை, பதுளை, அம்பாறை மாவட்டங்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக அதன் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் அந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறந்து மேலதிக நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளரும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனால் கல்லோயா வலது கரை பாதாகொடை ஊடாக தமணை, மலையடிக்குளம், எட்டாம் கட்டை சந்தி மற்றும் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கால்வாய்கள், வயல்கள் ஊடாக வரும் வெள்ளநீர் சம்புக்களப்பு, பட்டியடிப்பிட்டி, ஆறுகளை நிறைத்து அக்கரைப்பற்று முகத்துவாரங்களினூடாக கடலை நோக்கி செல்லும்.

மற்றையது கல்லோயா இடது கரையிலிருந்து சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஆறுகள், குளங்களை நிரப்பி களியோடை ஆறு, மற்றும் மாவடிப்பள்ளி ஆறு போன்ற பகுதிகளூடாகக் கடலைச் சென்றடையும்.

எனவே, இப்பகுதிகளிலுள்ள பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், இப்பகுதிகளிலுள்ள கால்நடைகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறும், இப்பிரதேசங்களிலுள்ள ஆறுகள், குளங்களில் நீராடுவதைத் தவிர்க்குமாறும், பொதுமக்கள் எச்சரிக்கப்படுவதுடன், இந்த வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்படும் முதலைகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு வரும் அபாயமுள்ளதால் அவைகளிலுமிருந்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்படி விடயங்களில் அசமந்தப் போக்குடன் இருக்காமல் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை செவிமடுத்து நடந்து கொள்ளுமாறு பொது மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

அதேவேளை 09 வருடங்களின் பின்னர் அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தின் 05 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கரையோரப் பகுதிகளில் உள்ளவர்கள் மிகவும் அவதானத்துடனும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொது மக்களைக் கேட்டுள்ளது.

கரையோர மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)