
posted 16th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஒன்பது மகளிர் கிளைகள் புனரமைப்பு
அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேசத்தில் 09 கிராம சேவகர் பிரிவுகளுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மகளிர் கிளைகளின் புனரமைப்புக் கூட்டம் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் என்.பி. நவாஸ் தலைமையில் மத்திய முகாம் பல்தேவைக் கட்டடத்தில் நடைபெற்றது.
இந்த கிளைகள் புனரமைப்புக் கூட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர், கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, கட்சியின் மாவட்ட செயற்குழுவின் செயலாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.சீ. சமால்டீன், அரசியல் அதிஉயர் பீட உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளருமான ஏ.சீ. நிஸார் ஹாஜியார் மற்றும் நாவிதன்வெளி பிரதேசத்தின் 09 சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைக் குழுக்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் கிளைகள் புணரமைக்கப்பட்டதுடன், கட்சி தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)