
posted 22nd January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இந்தியாவில் இராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு வடமராட்சியில் சிறப்பு பூசைகள்
இந்தியவின் அயோத்தியில் பெறும் நிலையில் யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபர ஆழ்வார் ஆலயத்திலும் சிறப்பு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன.
சுதர்சன ஈஸ்வரக் குருக்கள் கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் சிவாச்சாரியர்கள் இணைந்து இன்று திங்கட்கிழமைகாலை பத்து மணியளவில் ஸ்னபனம் அபிசேகம் நடாத்தப்பெற்று பின்னர் இராமருக்கான விசேட அபிடேக பூசைகள இடம் பெற்றன.
இதில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள், வல்லிபுர ஆழ்வார் பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் சிறீ இராம பஜனைகளும் இடம் பெற்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)