ஆணிவேரில் ஒருவர் ஹமீட்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஆணிவேரில் ஒருவர் ஹமீட்

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய ரீதியில் வியாபித்து மக்கள் சேவையில் தடம் பதித்துள்ளது, இந்த வகையில் கட்சிக்கு அடித்தளமிட்ட ஆணிவேர்களில் ஒருவராக மர்ஹும் வை.எல்.எஸ். ஹமீட் திகழ்வதுடன், அவர் பணிகள் என்றும் நினைவு கூரத்தக்கவையாகும்”

இவ்வாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக செயலாளர் நாயகம் மர்ஹும் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீதின் நினைவுப்பகிர்வு நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்’ (எம்.பி) கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில், கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.

“மர்ஹும் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் வாழ்வும் பணியும், எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்த நினைவுப் பகிர்வு நிகழ்வில், முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, அன்னார் பற்றிய நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.

அத்துன் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடாதிபதி. பேராசிரியர் எம்.எம்.எம். பாஸில், சட்டத்தரணி சஹீட் ஆகியோர் நினைவுரையும், முன்னாள் அமைச்சரும், கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ். அமீரலி நிகழ்வின் தொடக்க உரையையும் ஆற்றினர்.

மேலும், மர்ஹும் ஹமீட்டின் சகோதரர் டாக்டர். வை.எல். அன்புடீன் நிகழ்வின் ஏற்புரையையும், கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் நன்றியுரையையும் ஆற்றினர்.

இதே வேளை நிகழ்வில் மர்ஹும் வை.எல். ஹமீட்டின் ஆன்ம ஈடேற்றத்திற்காக அகில இலங்கை உலமா சபையின் கல்முனைக் கிளைத் தலைவர் மௌலவி முர்ஸி முப்தி விசேட துஆ பிரார்த்தனையும் செய்தார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“தேசிய ரீதியாக முஸ்லிம் சமூகத்தின் ஆளுமையுள்ள சேவையாளனாகவும், சமூகத்திற்காகவும், உண்மை நேர்மைக்காகவும் துணிந்து குரல் கொடுத்து வந்த வை.எல்.எஸ். ஹமீட்டின் இழப்பால் சமூகம் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் என்றும் நினைவு கூரத்தக்கவையாகவுள்ள அதேவேளை நாடளாவிய ரீதியல் வியாபித்துள்ள எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அன்னாருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள முஸ்லிம் தமிழ் மற்றும் குறிப்பிடத்தக்க சிங்கள புத்தி ஜீவிகளால் நன்கு அறியப்பட்ட மதிக்கப்பட்ட பெருந்தகையான வை.எல்.எஸ். என்ற ஆளுமையை நாம் எளிதில் மறந்து விடமுடியாது” என்றார்.

முன்னாள் தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உரையாற்றுகையில்,

சிறந்த சட்டஞானியாகத் திகழ்ந்த வை.எல்.எஸ். ஹமீட் அரசியலமைப்பு சட்டங்கள் தொடர்பில் சிறந்த அறிவு கொண்டவராகத்திகழ்ந்ததுடன், உரிய தருணங்களில் அவை தொடர்பிலான திருத்தங்களைத் துணிச்சலுடன் சுட்டிக்காட்டவும் தவறியதில்லை.

ஜனநாயகத்தின் பால் அதிக அக்கறை கொண்டு செயற்பட்ட அவர்தான் சார்ந்த சமூகத்தின் நலனுக்குக்காகவும், கட்சி மற்றும் நாட்டுக்காகவும் நேர்மையுடன் செயற்பட்டார்” என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழு முக்கியஸ்த்தர்களான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் (ஜவாத்) ஜுனைதீன் மான்குட்டி, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் அப்துல் மனாப் ஆகியோர் நிகழ்வு ஏற்பாடுகளைச் சிறப்புற செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆணிவேரில் ஒருவர் ஹமீட்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)