
posted 19th January 2023
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி, மல்லாவி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வைத்தியசாலை முன்பாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு ஏ9 வீதி வரை சென்று ஆர்ப்பாட்டமாக முன்னெடுக்கப்பட்டது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)