
posted 20th January 2023
நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமை (19) யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த அவர்கள், தொடர்ச்சியாக தாங்கள் இதற்கெதிராக குரல் கொடுப்போம் எனவும் குறிப்பிட்டனர்.
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் நல்லூர் சிவகுரு ஆதினத்தின் வேலன் சுவாமிகள் நேற்று முன் தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். எனினும், அவர் அன்றைய தினமே பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)