விளக்கிடும் வீதி நாடகம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் இணைந்து குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் வீதி நாடகமொன்றை யாழ். பல்கலைக்கழகத்தினுள் முன்னெடுத்தனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூட வளாகத்துக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (13) இந்த வீதி விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், இந்த முறை தைப்பொங்கலுக்கு எமது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்பியபோதும் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.

துயர் பகிர்வோம்

இதனை மையப்படுத்தியே இவ்வாறு சிறைக்கூண்டு அமைக்கப்பட்டு சிறையிலுள்ள கைதிகளை போல உருவகித்து பொங்கல் பொருட்கள் வீடுகளில் தயார் நிலையில் உள்ளபோதும் இம்முறையும் எமது உறவுகள் இன்றி பொங்கலை பொங்க முடியாத சூழலை வெளிப்படுத்து முகமாக இதனை நாம் நாடகமாக நிகழ்த்தி காட்டியிருந்தோம்.

அரசியல் கைதிகள் விடுதலையின்றி வாழும் சூழலில் இங்கு நடைபெற இருக்கின்ற தேசிய பொங்கல் விழாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரும்போது எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரிதிநிதிகள் குறித்த நிகழ்வை முற்றாக நிராகரிக்கவேண்டும் என்றார்.

விளக்கிடும் வீதி நாடகம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 11 - 12.12.2025

Mahanadhi - மகாநதி - 11 - 12.12.2025

Read More
Varisu - வாரிசு - 12.12.2025

Varisu - வாரிசு - 12.12.2025

Read More
Varisu - வாரிசு - 11.12.2025

Varisu - வாரிசு - 11.12.2025

Read More