வாழும் காலத்தில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் - ஜீவன்

ஈழத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல நூறு கலைஞர்கள் வாழ்ந்து மடிந்து விட்டனர். ஆனால் அவர்களில் ஒரு சிலரின் ஆற்றல்களும் படைப்புகளும், சேவைகளுமே வரலாற்றில் இடம்பிடித்துள்ளதுடன், மக்கள் மத்தியில் வெளிக்கொணரப்பட்டு கௌரவிக்கப்பட்டும் உள்ளனர். பலரது ஆற்றல்கள் வெளிக்கொணரப்படாமலேயே இன்றுவரை உறங்கிக் கிடக்கின் றன.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அவற்றை விட முக்கிய காரணம் அந்த கலைஞர்களையும், .படைப்பாளிகளையும், சமூக செயற்பாட்டாளர்களையும் இனங்கண்டு அவர்களை ஒன்றிணைத்து அவர்களின் ஆற்றல்களையும் படைப்புகளையும் சேவைகளையும் அங்கீகாரத்தை கொடுப்பதற்கான தேடல்களும் பொறிமுறையும் குறைவாகவே உளளது.

அந்த இடைவெளியை அல்லது தேடலை குறிப்பாக தமிழ் மொழி பேசும் படைப்பாளிகளை, கலைஞர்களை, சமூக செயற்பாட்டாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுத்து வருவது இந்த குபேரகா கலைமன்றம் இருந்து வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ் உடுவில் குபேரகா கலை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வேலணை கிழக்கு நேதாஜி சனசமூக நிலையத்தில் தைப்பொங்கல் விழா நடைபெற்றது. நேதாஜி சனசமூக நிலையத்தின் கலை அரங்கில் குபேரகா கலைமன்றத்தின் இயக்குனர் ரவிசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் அவரது பிரதிநிதியாக ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் யழ் மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் கலந்து சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்; வாழும் காலத்தில் கலைஞர்களின் ஆற்றல்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் பங்களிப்பை செய்து வருவதுடன் அதற்காக முன்னிற்பவர்களுக்கு உற்ற துணையாக இருந்து உந்துதலை வழங்கிவருபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

அந்தவகையில் எமது தேசத்தில் இலைமறைவாக வாழும் கலஞர்களை இனங்கண்டு கௌரவித்து அங்கீகாரம் கொடுத்துவரும் இந்த குபேரகா கலைமன்றத்துக்கு எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்குவதுடன் என்றும் உறுதுணையாக இருப்பார் எனறும் தெரிவித்துருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தின் கலைஞர்களை ஊக்குவிக்கவும் அவர்களது படைப்புகளையும் அங்கீகாரம் கொடுத்து கௌரவிவிப்பதையும் மையமாக கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்வு வருடாவருடம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் வடமாகாணத்தில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமான கலைஞர்கள், சமூச செயபாட்டாளர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களது படைப்புகள் மற்றும் சேவைகள் வெளிக்கொணரப்பட்டிருந்தது.

சுன்னாகம் தேமதுரம் அறக்கட்டளை நிதி அனுசரணையில் நடைபெற்ற குறித்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை நிர்வாகப் பொறுப்பாளரும் குறித்த பிரதேச சபையின் தவிசாளருமான நமசியாயம் கருணாகர குருமூர்த்தி, கட்சியின் உதவி நிர்வாகப் பொறுப்பாளரும் குறித்த பிரதேச சபையின் உறுப்பினருமான திருமதி அனுசியா ஜெயகாந்த், அருட்கலாநிதி ஜோன்போல், நேதாஜி சனசமூக நிலையத்தின் தலைவர் உள்ளிட்ட பல்துறை சார்ந்தவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாழும் காலத்தில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் - ஜீவன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)