வாழால் வெட்டப்பட்ட கடை உரிமையாளர்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை கட்டத்தொகுதியில் அமைந்துள்ள கேதீஸ் வர்த்தக நிலையத்தின் மீது நேற்றிரவு (18) புதன்கிழமை 10.05 மணிக்கு இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை கட்டத்தொகுதியில் அமைந்துள்ள கேதீஸ் வர்த்தக நிலையத்தின் மீது நேற்றிரவு 10.05 மணியளவில் இலக்கம் மறைக்கப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத வாள்வெட்டு கும்பல் வெற்று பியர் போத்தல்கள் மற்றும் கட்டையால் தாக்குதல் நடாத்தியதோடு வர்த்தக நிலைய உரிமையாளர் மீது சரிமாரியாக வாள் வீச்சு தாக்குதல் நடாத்தி ரூபா ஐந்து இலட்சம் பணத்தையும் கொள்ளை அடித்து சென்றுள்ளதாக வர்த்தகரின் நண்பர்களால் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாள் வெட்டு தாக்குதல்களின் போது வர்த்தக நிலைய உரிமையாளர் கையில் சிறு வெட்டு காயத்துடன் தப்பித்துக்கொண்டார்.

துயர் பகிர்வோம்

விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

குறித்த சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளரால் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழால் வெட்டப்பட்ட கடை உரிமையாளர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)