
posted 26th January 2023
சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுன்னாகம் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் சினிமா பாணியில் திங்கள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக இடம் பெற்று வரும் முரண்பாட்டின் காரணமாகவே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் பட்டப்பகலில் பொதுமக்கள் பார்த்திருக்க இந்த சம்பவம் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே உடனடியாக தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதோடு தாக்குதல் சம்பந்தமான பூரண அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளதாகவும் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)