
posted 18th January 2023
அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும், மருந்து தட்டுப்பாட்டுக்குத் தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் நேற்று (17) செவ்வாய் நண்பகல் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், பல்மருத்துவத்துறை சார்ந்தவர்கள், சட்ட மருத்துவ அதிகாரிகள், வங்கிகளின் தொழிற்சங்க அதிகாரிகள், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
அரசாங்கம் குறித்த பிரச்னைகளுக்கான தீர்வை தர முன்வரவேண்டுமென போராட்டக்காரர்கள் கோரினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)