வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின்  இறுதிநாள் போராட்ட நிகழ்வு

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்திய நிலையில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்து தமிழ் கட்சிகள் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

இப் பேச்சு வார்த்தையானது நான்கு சுவருக்குள் மட்டும் இடம்பெறாது மக்கள் யாவரும் அறிந்துகொள்ளும் விதமாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதிநாளான இன்றைய நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

ஜனாதிபதிக்கும் தமிழ் தரப்பினருக்கும் இடையே நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையை

துயர் பகிர்வோம்

முன்னிட்டு கடந்த 05.01.2023 தொடக்கம் 10.01.2023 செவ்வாய் கிழமை வரை ஆறு நாட்கள் தொடர்ச்சியாக அனைத்து தமிழ் கட்சிகளும் இப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்ற நிலையிலேயே இக் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு பகுதியில் இடம்பெற்றது.

இப் போராட்டத்தில் மன்னாரிலிருந்து நாலா பக்கங்களிலிருந்தும் மன்னார் நகரில் ஒன்றுகூடிய அதிகமானபேச்சுவார்த்தையை மக்கள் கலந்து கொண்டபோது இவர்களுக்கான அனுசரணையை 'மெசிடோ' மற்றும் 'போரம்' அமைப்புக்கள் முன்னெடுத்திருந்தது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின்  இறுதிநாள் போராட்ட நிகழ்வு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)