
posted 28th January 2023
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க றகமா நிறுவனத்தினரால் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட ஒட்டறுத்தகுளம், வண்டிகட்டு குளம், பாலப்பாணி குளம், கிடாப்பிடித்த குளம் ஆகிய குளங்களில் நன்னீர் வளர்ப்பு திட்டம் வெள்ளிக்கிழமை (27/01/2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தினை மந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் றகமா நிறுவனத்தின் செயலாளர் நாயகம் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
இச்செயல் திட்டத்திற்காக குறித்த குளங்கள் உள்ளடங்கிய கமக்கார அமைப்பினர் 10000 மீன் குஞ்களையும், றகமா நிறுவனத்தினரால் 50000 மீன் குஞ்சுகளும் குறித்த குளங்களுக்குள் விடப்பட்டுள்ளன.
உணவு உற்பத்தியினை அதிகரிக்கும் செயல் திட்டத்தின் கீழ் தேவைப்பாடுடைய 4 கிராமங்களில் 120 நன்னீர் மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் குடும்பங்களுக்கு நிலையான வருமானத்தினை பெற்றுக் கொடுப்பதற்காகவும், பிரதேச மக்களிற்கான போசாக்கிற்கான உணவினை பெற்றுக்கொடுப்பதற்காகவுமே இச் செயற்த் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாக றகமா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் றகாமா நிறுவன உத்தியோகத்தர்கள், கிராம மக்கள், மீனவர்கள், கமக்கார அமைப்பு பிரதிநிதிகள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)