முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டி

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு, கிழக்கில் தனித்தே போட்டியிடுமென கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.

இன்று 10 ஆம் திகதி திங்கட் கிழமை நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தலைவர் ஹக்கீம் இந்த முடிவை அறிவித்தார்.

மேற்படி முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் கட்சியின் தவிசாளர் “முழக்கம்” ஏ.எல்.அப்து மஜீத் தலைமையில், மருதமுனை பொது நூலக மண்படத்தில் நடைபெற்றது.

துயர் பகிர்வோம்

கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் ஹக்கீம், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் கட்சியின் மரச்சின்னத்தில் தனித்தே போட்டியிடுவதாகவும்,

வடக்கு கிழக்கிற்கு வெளியே எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

The Best Online Tutoring

மேலும் இன்றைய கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் கட்சி முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகள், வேட்பாளர் தெரிவுகளை மேற்கொள்வதற்கென குழுக்களும் தெரிவு செய்யப்பட்டன.

இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், எம். பைஸால் காசிம், தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத், பிரதேச செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் குறித்த தேர்தல் நடவடிக்கைக்குழுக்களை முகாமைத்துவம் செய்வரெனவும் அறிவிக்கப்பட்டது.

இதேவேளை கிழக்கின் பிரபல முஸ்லிம் அரசியல் வாதியும், முன்னாள் அமைச்சருமான காத்தான்குடி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இன்று முஸ்லிம் காங்கிரசுடன் மீண்டும் இணைந்து கொண்டுள்ளார்.

இந்த இணைவு தொடர்பான நிகழ்வு ஒன்று இன்று இரவு வாளைச்சேனை காவத்தமுனையில் இடம்பெற்றது.

நிகழ்வில் தலைவர் ஹக்கீமுடன் கட்சியின் உயர்மட்ட பிரமுகர்கள், ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)