முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

இன‌ப்பிர‌ச்சினைக்கான‌ தீர்வுத் திட்ட‌ம் த‌யாரிப்ப‌தில் முஸ்லிம் க‌ட்சிக‌ள் அனைத்தும் ஒன்றிணைந்து செய‌லாற்ற‌ முன்வ‌ர‌வேண்டும். இவ்வாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் அமைப்புக்க‌ளோ, ப‌ள்ளிவாச‌ல் நிறுவ‌ன‌ங்க‌ளோ தீர்வு திட்ட‌ம் ப‌ற்றி பேசுவ‌து கால‌ம் க‌டத்தும் செய‌லாகும்.

அர‌சாங்க‌ம் த‌மிழ் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளிடம்தான் தீர்வை கேட்டுள்ள‌தே த‌விர‌ கோயில்க‌ளிட‌மோ, சேர்ச்சுக‌ளிட‌மோ அல்ல‌.

துயர் பகிர்வோம்

ஆக‌வே உட‌ன‌டியாக‌ முஸ்லிம்க‌ளை த‌லைவ‌ர்க‌ளாக‌ கொண்ட‌ க‌ட்சிக‌ள் ஓரிட‌த்தில் அம‌ர்ந்து இது ப‌ற்றி பேச‌ முன்வ‌ர‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி அழைப்பு விடுக்கிற‌து. இந்த‌ அழைப்பை ஏற்கும்ப‌டி க‌ட்சிக‌ளுக்கு அழுத்த‌ம் கொடுப்ப‌தே ப‌ள்ளிவாச‌ல் நிறுவ‌ன‌ங்க‌ளின் க‌ட‌மையாகும்.

இந்த‌ அழைப்புக்கு செவிசாய்க்காத‌ க‌ட்சிக‌ளை ம‌க்க‌ள் தேர்த‌லில் ஓர‌ம் க‌ட்டுவ‌து ம‌க்க‌ள் மீதுள்ள‌ க‌ட‌மையாகும்.

முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)