
posted 4th January 2023
முசலி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மரியநாயகம் ஒஸ்மன் அவர்களின் தலைமையில் மன்னார் முசலி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வருடாந்த விஷேட நிகழ்வும் குறும்பட வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.
புதன்கிழமை (04.01.2023) காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் பிராந்திய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி. வினோதன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்..
மேலும், மன்னார் வைத்திய சாலை பணிப்பாளர், பிராந்திய பல் வைத்தியர், முசலி பிரதேச செயலாளர் மற்றும் பலர் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள சிறந்த தாய்மார் கழகத்திற்கு சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், முசலி சுகாதா வைத்தி அதிகாரி பிரிவு அலுவலகத்தில் இருந்து இடமாற்றலாகிய செல்லும் அலுவலர்களுக்கும் நினைவுச் சின்னங்களும் வழங்கிய நிகழ்வும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து போசாக்கு மாதத்தை முன்னிட்டு குறைந்த செலவில் போசாக்கு உணவுகளை தயாரிப்பது மற்றும் உணவுப் பயிர்கள் பயிரிடுவது தொடர்பான விழிப்புணர்வு குறுந்திரைப்படமும் வெளியீடு செய்யப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)