
posted 12th January 2023
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தால் சிறிய கூட்டுறவு நகர் கடை புதன் (11) காலை 10:30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் தங்கவேல் தங்கரூபன் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக பிரதம,சிறப்பு, கௌரவ விருந்தினர்கள், மற்றும் பணிப்பாளர்கள், கூட்டுறவாளர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டு மங்கல விளக்கு ஏற்றப்பட்டது.
மங்கல விளக்கினை நிகழ்வின் பிரதம விருந்தினரான யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி அணையாளர் மு. சந்திரசேகர, சிறப்பு விருந்தினரான வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன், கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சண்குகநாதன், முன்னாள் தலைவர்களான சி. திரவியநாதன், பொன்னம்பலம் மற்றும் விருந்தினர்கள் ஏற்றி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தொடர்ந்து வரவேற்புரையை சங்கத்தின் செயலாளர் நிகழ்தினார் தலமை உரையினை சங்கத்தின் தலைவர் த. தங்கரூபன் நிகழ்தியதை தொடர்ந்து கௌரவ விருந்தினர்களான கிராம சேவகர் சுபேஸ், சிறப்பு விருந்தினர் பிரதம விருந்தினர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இதில் யாழ் மாவட்ட கூட்டுறவு திணைக்கள உத்தியோகத்தர்கள், கூட்டுறவாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கூட்டுறவாளர்கள், நலன் விரும்பிகள், சங்க பணியாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)