
posted 19th January 2023
மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலம் வைத்திய சேவை செய்து பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் இரண்டு வைத்தியர்கள் மற்றும் ஒரு பிராந்திய மேற்பார்வை பொதுச்சுகாதார தாதிய உத்தியோகத்தருக்குமான பாராட்டு விழா மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜா வினோதன் அவர்களின் தலைமையில் முருங்கன் டொன் பொஸ்கோ விழா மண்டபத்தில் வியாழக்கிழமை (19) காலை 10.30.மணியளவில் நடைபெற்றது.
தாய் சேய் நலன் வைத்திய அதிகாரி வெற்றி நாதன் அவர்கள், பிராந்திய பற்சிகிச்சை வைத்திய அதிகாரி செல்வி. ஸ்ரீதேவி வேதவனம், பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார தாதிய உத்தியோகத்தர் வடுவத்த ஆகியோரே சேவையிலிருந்து ஓய்வு பெற்று செல்பவர்கள் ஆவர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் டொன் பொஸ்கோ பங்குத்தந்தை , வைத்திய கலாநிதி டெனி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், ஒஸ்மான் சாள்ஸ், ரூபன் லெம்பேட், சில்வா, நிஷாந்தன் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் வைத்தியர்களின் சேவை காலம் தொடர்பான அனுபவங்கள் வைத்தியர்களால் பகிரப்பட்டு, பாராட்டுக்களும் நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இத்துடன் மன்னார், நானாட்டான், மடு , முசலி போன்ற சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு சுகாதார உத்தியோகத்தர்களால் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.
இந்த நிகழ்வில் வைத்தியர்களின் சேவை காலம் தொடர்பான அனுபவங்கள் வைத்தியர்களால் பகிரப்பட்டு, பாராட்டுக்களும் நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)