
posted 17th January 2023
மன்னார் மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் 2023 ம் ஆண்டுக்கான பொங்கல் விழாவும் உழவர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது.
வருடந்தோறும் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுவரும் பொங்கல் விழாவும் உழவர்கள் கௌரவிப்பும் இவ்வாண்டும் மன்னார் மாவட்ட செயலகத்தின் விழா மண்டபத்தில் செவ்வாய் கிழமை (17) இடம்பெற்றது.
மன்னார் மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இந் நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் மாவட்டச் செயலகதத்தின் கணக்காளருமான திரு.செ. செல்வக்குமார் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் அவர்கள் கலந்து கொண்டு மன்னார் மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கௌரவத்தையும் வழங்கினார்.
அத்துடன் தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் பங்குபற்றி பெறப்பட்ட பாராட்டு சான்றிதழை மன்னார் பிரதேச செயலாளரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் உதவி பிரதேச செயலாளர்கள் என்று பலரும் கரலந்து கொண்டார்கள்.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு இ. நித்தியானந்தன் அவர்களினால் நிகழ்ச்சிகள் யாவும் தொகுத்து வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)