
posted 20th January 2023
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா இன்று 20 ஆம் திகதி வலய கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. வரணியா சாந்தரூபன் கௌரவ அதிதியாகவும் கொண்டனர்.
வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் உட்பட தமிழ் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதி வலயக் கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜீம் விழாவில் உரையாற்றும்போது தைப் பொங்கலின் சிறப்புக்களை விளக்கி உரையாற்றினார்.
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் இன ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக வருடாந்தம் இப் பொங்கல் விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)