
posted 10th January 2023
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன என்று சந்தேகிக்கப்பட்ட இடத்தைத் தோண்டும் பணி நேற்று (09) திங்கட்கிழமை தொடங்கியது. எனினும், தோண்டியவர்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை.
கொக்குவில் - பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் இவ்வாறு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இருந்தபோதும் எதுவித ஆயுதங்களும் அங்கிருந்து மீட்கப்படவில்லை.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)