
posted 1st January 2023

குறைந்த வருமானத்தைக் கொண்ட 30 குடும்பங்கள் கிராம சேவகரூடாக தெரிவு செய்யப்பட்டு இன்று (01) வடமராட்சி கிழக்கு, நாகர் கோவில், நாகதன்பிரான் ஆலயத்தில் வைத்து, இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
55து படைப்பிரிவின் சேனாதிபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்தின தலைமையில், 553வது படைப் பிரிவு, 10து விஜயபாகு இணைந்து இவ் உலருணவு விநியோகத்தினை மேற்கொண்டனர்.
அமெரிக்க நியூயோர்க்கில் வசிக்கும் அனையா நிதியுதவியில் தெரிவுசெய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கு எட்டாயிரம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)