புதிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்
புதிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்

அம்பலவாணர் சிவபாலசுந்தரன்

அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நியமிக்க அமைச்சரவை நேற்று (16) அனுமதி வழங்கியது.

இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா மாவட்டங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

அண்மையில், மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய அவர் தற்போது யாழ்ப்பாணம் மாவட்ட செயலராக நியமிக்கப்படவுள்ளார்.

முன்னர், யாழ். மாவட்ட அரச அதிபராக இருந்த க. மகேசன் கடந்த முதலாம் திகதி முதல் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்று சென்றிருந்தார். இதையடுத்து அந்தப் பதவி வறிதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துயர் பகிர்வோம்

விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

புதிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)