புதிய அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி. கலாமதி பத்மராஜா இன்று (17) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து நாளை (18) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுகவுள்ளார்.

இவர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகவும், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராகவும் முன்னர் பதவி வகித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகப் பணியாற்றிய க. கருணாகரன் ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அரசாங்க அதிபர்

திருமதி. கலாமதி பத்மராஜா

புதிய அரசாங்க அதிபர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)